இந்தியா

கர்நாடகத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: மருத்துவ நிபுணர்

IANS


பெங்களூரு: மூன்றாவது அலை தாக்கினால் அது கர்நாடகத்தை எப்படி பாதிக்கும் என்பதை சொல்ல முடியவில்லை, மாநிலத்துக்குள் மூன்றாம் அலை நுழையக் கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று மாநில கரோனா நிபுணர் குழு தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று கர்நாடக முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மருத்துவர் தேவி ஷெட்டி, கரோனா மூன்றாம் அலை குறித்த ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். கரோனா மூன்றாம் அலை மாநிலத்தை அக்டோபர் மாதத்தில் தாக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும், கரோனா மூன்றாம் மாநிலத்துக்குள் வரக் கூடாது என்று பிரார்த்தனை செய்வோம். எனினும் அது வந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த கேள்விக்கு, மாநில அரசு சரியான வழியிலேயே செயல்படுகிறது என்று கூறினார்.

மேலும், மத நிகழ்ச்சிகளுக்காக மக்கள் ஒன்றுகூட வேண்டாம். மக்கள்தான் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் பொறுப்பற்று செயல்பட்டால், பிறகு தடுப்பூசி கூட பலனளிக்காது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT