தில்லியில் நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக இருவரும் பேசியதாகத் தெரிகிறது. அவருடன் மாநில நீர்வளத் துறை அமைச்சர் கோவிந்த் எம்.கர்ஜோல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பதற்கு முன் ஆற்றுநீா்ப் பங்கீடு தொடா்பாக மாநில தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவட்கி தலைமையிலான வழக்குரைஞா்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கு அடுத்தபடியாக மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் உள்ளிட்டோரையும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.