ம.பி.யில் மர்மக் காய்ச்சல்: படுக்கையில்லாததால் தரையில் வைத்து சிகிச்சை 
இந்தியா

ம.பி.யில் மர்மக் காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் தரையில் கிடத்தி சிகிச்சை

மத்தியப் பிரதேசத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியதால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரை தரையில் வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் நேரிட்டுள்ளது. 

DIN

மத்தியப் பிரதேசத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியதால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரை தரையில் வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் நேரிட்டுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் மர்ம வைரஸ் காய்ச்சலால் ஏராளமான சிறுவர், சிறுமியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால், எஞ்சிய சிறுவர், சிறுமிகளை தரையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய மாவட்ட தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி அனிதா கூறியதாவது, அதிகமாக உள்ள நோயாளிகளை மற்ற மருத்துவமனைக்கு மாற்ற அறிவுறுத்தியுள்ளேன். அவை அடுத்த ஓரிரு நாள்களில் நடைபெறும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?

அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: அமல்படுத்த உத்தரவு!

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

பொருத்தம்... அருள்ஜோதி ஆரோக்கியராஜ்!

ஆப்கன் நிலநடுக்கம்: 1,450-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

SCROLL FOR NEXT