நாட்டில் புதிதாக 46 ஆயிரம் பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,164 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,164 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 34,159 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 607 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,25,58,530 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,17,88,440 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,36,365 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | காபூலிலிருந்து மேலும் 24 இந்தியர்கள் வருகை
இன்றைய நிலவரப்படி 3,33,725 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் இது 1.03 சதவிகிதம்.
குணமடைவோர் விகிதம் 97.63 சதவிகிதம்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 80,40,407 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 60,38,46,475 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.