இந்தியா

உச்சநீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகள்: மத்திய அரசு ஒப்புதல்

DIN

உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.  

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34 என்ற நிலையில், சமீபத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்றதால் தற்போது உச்சநீதிமன்றத்தில் பணியிலிருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை 24-ஆக குறைந்துள்ளது. 

இதனால், நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி பணியிடங்களுக்கான பெயா்களை இறுதி செய்து, 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பெயா்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. 

இதன்படி, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமாா் மகேஷ்வரி, தெலங்கானா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகா்த்தனா, கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமாா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்குரைஞரும் முன்னாள் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞருமான பி.எஸ்.நரசிம்மாவின் பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு இந்த பரிந்துரையை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT