முகப்பு
இந்தியா

மதுபான விடுதியாக மாறிய தில்லி காவல்நிலையம்: விடியோ வைரல்

தில்லி காவல்நிலையத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள குற்றவாளிகள் சிறைக்குள் மதுபானம் அருந்தும் விடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
மதுபான விடுதியாக மாறிய தில்லி காவல்நிலையம்: விடியோ வைரல்
பகிர்:

தில்லி காவல்நிலையத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள குற்றவாளிகள் சிறைக்குள் மதுபானம் அருந்தும் விடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தில்லியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான ராகுல் காலா மற்றும் நவீன் பாலி ஆகியோர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். பிரபல ரெளடி நீரஜ் பாவனா உடன் சிறைப்படுத்தப்பட்ட இவர்களின் விடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

காவல்நிலைய சிறைக்குள் சகல வசதிகளுடனும் மதுபானம் அருந்தும் இந்த விடியோ தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேபோல் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தப்பட்டுள்ளதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.

காவல்நிலைய சிறைக்குள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மதுபானம் எப்படிக் கிடைத்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள தில்லி காவல்துறை இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →