முகப்பு
இந்தியா

தில்லியில் இன்று புதிதாக 45 பேருக்கு கரோனா 

தில்லியில் இன்று புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

தில்லியில் இன்று புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,37,595ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் புதிதாக இன்று இறப்பு எதுவும் பதிவாகவில்லை. 

இதனால் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை 25,080-ஆக உள்ளது. தில்லியில் இன்று மொத்தம் 72,153 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவற்றில் 48,908 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளும், 23,245 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளும் இடம் பெற்றுள்ளன. 

கரோனாவிலிருந்து இன்று 21 பேர் குணமடைந்ததையடுத்து இதுவரை 14.12 லட்சம் போ் நோயில் இருந்து குணமடைந்துள்ளனா். இன்று 413 போ் சிகிச்சையில் இருந்தனா். கட்டுப்பாட்டு மண்டங்களின் எண்ணிக்கை 217ஆக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.