இந்தியா

விமானிக்கு உடல்நலக் குறைவு: நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

DIN

நடுவானில் விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நாக்பூர் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து வங்கதேச தலைநகர் தக்காவுக்கு 126 பயணிகளுடன் சென்ற விமானம் இந்திய வான் எல்லையான ராய்ப்பூர் அருகே இன்று காலை பறந்து கொண்டிருந்தது.

அப்போது, விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

எனினும், விமானம் பறந்து கொண்டிருந்த பகுதிக்கு அருகே நாக்பூர் விமான நிலையம் இருந்ததால், விமானத்தை அங்கு திருப்பிவிட்டனர்.

இதையடுத்து, இன்று காலை 11.40 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தின் விமானியை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால், அதில் பயணித்த 126 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிர் தப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT