இந்தியா

கேரளத்தில் ஆகஸ்ட் 30 முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு

DIN

நாளுக்குநாள் அதிகரித்து கரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 30 முதல் மாநிலம் முழுவதும் இரவுநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

இந்நிலையில் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இரவுநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தார். 

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்க நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,265 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT