முகப்பு
இந்தியா

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

கரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை  செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை  செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.  

இந்நிலையில் நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் உலக அளவில் கரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

‘ஏா் பபுள்’ விதிகளைக் கடைப்பிடித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.