மனித உரிமை ஆணையத்தில் காங். புகார் 
இந்தியா

ஹரியாணாவில் விவசாயிகள் மீது தாக்குதல்: மனித உரிமைகள் ஆணையத்தில் காங். புகார்

ஹரியாணாவில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணையத்திடம் நாளை(ஆக.31) புகார் அளிக்கவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ANI

ஹரியாணாவில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணையத்திடம் நாளை(ஆக.31) புகார் அளிக்கவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலம் கர்ணல் மாவட்டம் அருகே உள்ள சுங்கச் சாவடியில் கடந்த சனிக்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தாக்குதல் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து மாநில அரசுக்கு எதிராக கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, தீபேந்தர் ஹூடா, குமாரி செல்ஜா உள்ளிட்டோர் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குழு நாளை(ஆக.31) தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

SCROLL FOR NEXT