கர்நாடகத்தில் மேலும் 1217 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,198 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 25 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,49,445 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,93,715 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,318 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கேரளத்தில் மீண்டும் அதிகரித்த கரோனா: புதிதாக 30,203 பேர் பாதிப்பு
இன்றைய நிலவரப்படி 18,386 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.