பெங்களூருவில் கார் விபத்து: ஒசூர் எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் பலி 
இந்தியா

பெங்களூருவில் கார் விபத்து: ஒசூர் எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், காரில் இருந்த 7 பேரும் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN


பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், காரில் இருந்த 7 பேரும் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷ் - அவரது மகன் கருணாசாகர்

இந்த விபத்தில் பலியானவர்களில் ஒருவர், ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின்  மகன் கருணாசாகர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து நள்ளிரவில் நிகழ்ந்ததால், விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து ஆடுகொடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோரமங்கலா பகுதியில், நள்ளிரவில் வேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானதில், கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த காரில் இருந்த ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

SCROLL FOR NEXT