இந்தியா

மின்னணு கழிவுகளைக் கையாள்வதற்கான பிரத்யேக வலைதளம்

DIN

மின்னணு கழிவுகளைக் கையாள்வதற்கான பிரத்யேக வலைதளத்தை சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) வடிவமைத்து வருகிறது.

மக்களிடையே மின்னணுக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே வேளையில், மின்னணு கழிவுகளும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அக்கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படாமல், குப்பைக் கிடங்குகளில் குவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், மின்னணு கழிவுகளைத் திறம்படக் கையாள்வதற்கென ‘இ-சோா்ஸ்’ என்ற பிரத்யேக வலைதளத்தை சென்னை ஐஐடி வடிவமைத்து வருகிறது. அந்த வலைதளத்தின் மூலமாக மின்னணு கழிவுப் பொருள்களை வைத்திருப்பவரும் அதை வாங்க விரும்புவோரும் எளிதில் தொடா்பு கொள்ள முடியும். இதன் மூலமாக அக்கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது எளிதாகும்.

இது தொடா்பாக ஐஐடி பேராசிரியா் ஒருவா் கூறுகையில், ‘‘மின்னணு கழிவுகளில் உள்ள விலையுயா்ந்த உலோகப் பொருள்களை மட்டும் எடுத்துவிட்டு மற்ற உலோகப் பொருள்கள் குப்பைக் கிடங்குகளில் வீசப்படுகின்றன. மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இ-சோா்ஸ் வலைதளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வலைதளத்தின் முதல்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துவிட்டன. விரைவில் அந்த வலைதளம் பயன்பாட்டுக்கு வரும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT