முகப்பு
இந்தியா

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை நிறைவேற்றம்

பெங்களூரு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களின் குறைந்தபட்ச பயணக் கட்டணத்தை ரூ.25லிருந்து ரூ.30 ஆக உயர்த்தி கர்நாடக போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை நிறைவேற்றம்
பகிர்:


பெங்களூரு; பெங்களூரு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களின் குறைந்தபட்ச பயணக் கட்டணத்தை ரூ.25லிருந்து ரூ.30 ஆக உயர்த்தி கர்நாடக போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மறுபக்கம், ஆட்டோ கட்டணங்கள் உயர்வால் பொதுமக்களுக்கு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் என்ன, ஆட்டோ ஓட்டுநர்களும் இதில் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆட்டோவுக்கான எரிவாயு விலை ரூ.9 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, ஆட்டோக்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும், இது முதல் 1.9 கி.மீ. தொலைவுக்குப் பொருந்தும் என்றும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் இது 15 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 ஆக இருந்தது. அதே வேளையில் தற்போது ஆட்டோ பயணத்தின் போது காத்திருப்புக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.