முகப்பு
இந்தியா

‘காங். இல்லாமல் பாஜகவைத் தோற்கடிக்க நினைப்பது வெறும் கனவு’: வேணுகோபால்

காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைத்து பாஜகவைத் தோற்கடிக்க நினைப்பது வெறும் கனவு என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் புதன்கிழமை விமர்சித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்(கோப்புப்படம்)
பகிர்:


காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைத்து பாஜகவைத் தோற்கடிக்க நினைப்பது வெறும் கனவு என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் புதன்கிழமை விமர்சித்துள்ளார்.

சமீபகாலமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்கும் நோக்கில் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.

இந்நிலையில், மும்பைக்கு 3 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா, சிவசேனை மூத்த தலைவர் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, மும்பையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின்போது, அனைத்துப் பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்தால் பாஜகவை எழுதில் தோற்கடிக்க முடியும் என்றார்.

இதை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸின் வேணுகோபால் கூறியதாவது:

"அனைவரும் இந்திய அரசியலின் உண்மைத்தன்மையை அறிவர். காங்கிரஸ் இல்லாமல் பாஜகவைத் தோற்கடிக்க முடியும் என நினைப்பது வெறும் கனவே" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.