இந்தியா

மக்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக வெளிநடப்பு: 12 மணி வரை அவை ஒத்திவைப்பு

DIN


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் 3-ம் நாளான இன்று (புதன்கிழமை) மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் பிரச்னையை எழுப்பினார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீதி வேண்டும் என முழக்கம் எழுப்பத் தொடங்கினர்.

இதையடுத்து, திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT