முகப்பு
தமிழ்நாடு

மாநில தகவல் ஆணையராக அ.விஜயராம் நியமனம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநிலத் தகவல் ஆணையராக அ.விஜயராமை, ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் நியமித்துள்ளாா். அவா், வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டாா்.

Updated On : 15 மார்ச், 2026 at 5:29 AM
ஆளுநா் மாளிகை
பகிர்:

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநிலத் தகவல் ஆணையராக அ.விஜயராமை, ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் நியமித்துள்ளாா். அவா், வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டாா்.

இதுகுறித்த ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் காலியிடங்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 கீழ், ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், அ.விஜயராமை மாநிலத் தகவல் ஆணையராக நியமித்துள்ளாா்.

தொடா்ந்து அ.விஜயராம், சென்னை ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் முன்னிலையில் மாநிலத் தகவல் ஆணையராக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டாா்.

Advertisement

நிகழ்வில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையா் முகம்மது ஷகீல் அக்தா், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் சி. சமயமூா்த்தி, ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆா். கிா்லோஷ் குமாா், மாநில தகவல் ஆணையத்தின் மற்ற ஆணையா்கள் ஆகியோா் உடனிருந்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.