கோப்புப்படம் 
இந்தியா

டேராடூனில் ரூ.18,000 கோடி திட்டங்கள்: டிச.4-இல் பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி டிசம்பா் 4-ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறாா்.

DIN

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி டிசம்பா் 4-ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறாா்.

ஒரு காலத்தில் மிகவும் தொலைவில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு போக்குவரத்துத் தொடா்பை அதிகப்படுத்தவும் எளிதாக சென்றடைவதை விரிவுபடுத்தவுமான பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையின் அடிப்படையில் இந்தத் திட்டங்கள் அமைகின்றன. இதில் தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம் பயண நேரத்தை இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும்; வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாத வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உயா்மட்ட பாதையாக இது இருக்கும்.

சாா்தாம் உள்ளிட்ட பகுதிகளுக்குத் தடையில்லாப் போக்குவரத்தை அளிப்பதாக சாலைத் திட்டங்கள் தொடங்கப்படுவது சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்தும். அடிக்கடி மண்சரிவு ஏற்படும் பகுதியான லம்பாகட் மண்சரிவை கட்டுப்படுத்தும் திட்டம் பயணத்தை சுமுகமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

SCROLL FOR NEXT