முகப்பு
இந்தியா

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு விநியோகம்:கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு விநியோகத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு விநியோகத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம்

பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-

தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களான 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 பேருக்கு ரூ.1,088 கோடி செலவில் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, திராட்சை தலா 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு அரை கிலோ, நெய், மஞ்சள்தூள், மிளகாய், மல்லித் தூள், கடுகு, சீரகம் தலா 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், உளுத்தம் பருப்பு அரை கிலோ, ரவை, கோதுமை மாவு தலா ஒரு கிலோ, உப்பு அரை கிலோ ஆகியன ஒரு துணிப் பையில் வைத்து வழங்கப்பட உள்ளன.

கரும்பும் தனியாக வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒரு கரும்புக்கு ரூ.33 வீதம் ரூ.71 கோடியே 10 லட்சம் செலவிடப்பட உள்ளது. கரும்பினை கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தக் குழுவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா், மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஆகியோா் இடம்பெறுவா்.

பதிவாளா் மூலம் கொள்முதல்: பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படவுள்ள 20 பொருள்களில், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை மட்டும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் மூலமாக கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் வழியாக பயனாளிகளுக்கு விநியோகம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →