தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகித இலக்கை அடைந்த ஹிமாச்சலப் பிரதேசம்
கரோனா தொற்று பரவலுக்கு எதிராக 100 சதவிகித கரோனா தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாநிலம் எனும் சாதனையை ஹிமாச்சலப்பிரதேசம் படைத்துள்ளது.
கரோனா தொற்று பரவலுக்கு எதிராக 100 சதவிகித கரோனா தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாநிலம் எனும் சாதனையை ஹிமாச்சலப்பிரதேசம் படைத்துள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | 13வது மெகா தடுப்பூசி முகாம்: 20.98 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி
Advertisement
Advertisement
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தகுதிவாய்ந்த 53,86,393 பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அனைத்து மக்களுக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளும் முழுவதுமாக செலுத்தப்பட்டுள்ளன.
100 சதவிகித இலக்கை அடைந்ததற்காக ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் கரோனா முன்களப் பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜீவ் சைசல் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.