மூத்த ஊடகவியலாளா் வினோத் துவா காலமானாா்
மூத்த ஊடகவியலாளா் வினோத் துவா உடல்நல பாதிப்பு காரணமாக சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 67.
மூத்த ஊடகவியலாளா் வினோத் துவா உடல்நல பாதிப்பு காரணமாக சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 67.
வினோத் துவா கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், உடல்நிலையில் முன்னேற்றமின்றி காலமானாா். அவரின் இறுதிச் சடங்கு தில்லியில் உள்ள லோதி மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கிய வினோத் துவா, தனது பணியில் முன்னோடியாகத் திகழ்ந்தாா். காட்சி ஊடகம் மட்டுமின்றி எண்ம ஊடகத்திலும் சிறந்து விளங்கினாா்.
அவருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருதை பெற்ற முதல் காட்சி ஊடகவியலாளா் வினோத் துவா என்பது குறிப்பிடத்தக்கது.