இந்தியா

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு

DIN

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்னாப்ரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பிய 2 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. 

அந்த நபர் தன்சானியா நாட்டில் இருந்து தில்லி திரும்பியவர் என தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி புதிய உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில், டெல்டா உருமாறிய கரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால் புதிய உருமாறிய கரோனா உலக நாடுகள் மத்தியில் அடுத்த அலை குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. 

இருப்பினும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒமைக்ரான் பரவிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT