இந்தியா

நாகலாந்து சம்பவம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு

நாகலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

DIN

நாகலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் எனத் தவறாக நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 13 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து நடந்த வன்முறையில், மேலும் ஒரு பொதுமக்கள் மற்றும் ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று மாநிலங்களவை தொடங்கியவுடன் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!

SCROLL FOR NEXT