tomar1094721 
இந்தியா

வேளாண் உள்கட்டமைப்புக்குரூ.2,071 கோடி கடன்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமா்

வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் 4,003 திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.2,071 கோடி கடன் வழங்கியுள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

DIN

வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் 4,003 திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.2,071 கோடி கடன் வழங்கியுள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை இது தொடா்பான கேள்விக்கு அவா் எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறியதாவது:

வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் 8,488 திட்டங்களுக்கு ரூ.6,098 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 4,003 திட்டங்களுக்கு ரூ.2,071 கோடி கடன் வழங்கப்பட்டுவிட்டது.

அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 1,424 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து கா்நாடகத்தில் 900 திட்டங்கள், உத்தர பிரதேசத்தில் 684 திட்டங்கள், ராஜஸ்தானில் 654 திட்டங்கள், மகாராஷ்டிரத்தில் 555 திட்டங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. இதில் பெரும்பாலானவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுடையவை ஆகும். அதற்கு அடுத்து வேளாண் தொழில் முனைவோரும், தனியாக விவசாயம் செய்து வருவோரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தங்கள் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அறுவடைக்குப் பிந்தைய நடைமுறைகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வேளாண் கூட்டுறவு முறையின் உள்கட்டமைப்பு சொத்துகளை அதிகரிப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT