ஒமைக்ரான் அச்சம்: வெளிநாட்டிலிருந்து திரும்பிய 100 பேரை தேடுகிறது மும்பை 
இந்தியா

ஒமைக்ரான் அச்சம்: வெளிநாட்டிலிருந்து திரும்பிய 100 பேரை தேடுகிறது மும்பை

ஒமைக்ரான் அச்சம் காரணமாக, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த 295 பேரில், 109 பேர் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக, கல்யாண் டோம்பிவாலி நகராட்சித் தலைவர் விஜய் சூர்யவன்ஷி தெரி

DIN


தாணே: ஒமைக்ரான் அச்சம் காரணமாக, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த 295 பேரில், 109 பேர் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக, கல்யாண் டோம்பிவாலி நகராட்சித் தலைவர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளிநாடுகளிலிருந்து தாணே மாவட்டத்துக்குள் நுழைந்த 100 பேர் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

சிலரது செல்லிடப்பேசிகள் அணைத்துவைக்கப்பட்டுள்ளது. சிலர் கொடுத்த முகவரியில் வீடுகள் பூட்டப்பட்டுள்ளன.

அபாய நாடுகள் பட்டியலிலிருக்கும் நாடுகளிலிருந்து வருவோர், 7 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், 8வது நாள் மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், கரோனா இல்லை என்று முடிவு வந்தாலும், மீண்டும்ட 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுபோல திருமணங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

டோம்பிவாலி பகுதியில் அண்மையில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவாரத்தில் நாளை மின்தடை

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி

தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்

வீடுகளுக்கு நேரடி ரேஷன் பொருள்கள் வழங்கும்போது இறந்த அட்டைதாரா் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்: கூட்டுறவுத் துறை உத்தரவு

கல் குவாரி பிரச்னை: தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி குத்திக் கொலை

SCROLL FOR NEXT