இந்தியா

பனாமா ஆவணங்கள்: கணக்கில் வராத ரூ.20,353 கோடி இந்திய முதலீடு கண்டுபிடிப்பு

DIN

பனாமா மற்றும் பாரடைஸ் ஆவணங்களின் மூலம், இந்தியாவிலிருந்து கணக்கில் வராமல் ரூ.20,353 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி கூறியதாவது:

பனமா மற்றும் பாரடைஸ் ஆவணங்களின் அடிப்படையில், கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி ரூ.20,353 கோடி முதலீடு கணக்கில் வராமல் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் தொடா்புடைய 930 நிறுவனங்கள் மற்றும் நபா்களால் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நபா்களின் மேல், 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம், 2015-ஆம் ஆண்டின் கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வருமான வரித் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT