முகப்பு
இந்தியா

தில்லியில் காற்று மாசு சற்று குறைவு

தில்லியில் இன்று காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் இன்று காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள், விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தில்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காற்று மாசு ஏற்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிரமம் நிலவி வருகின்றது.

நேற்று காற்றின் தரமானது ‘மிக மோசம்’ என்ற பிரிவில் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்து ‘மோசம்’(235) என்ற பிரிவுக்கு வந்துள்ளது.

காற்று மாசு காரணமாக தில்லியில் தொடர்ந்து பள்ளிகள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →