இந்தியா

விபின் ராவத், மனைவி மதுலிகா ராவத்துக்கு வெள்ளிக்கிழமை இறுதி மரியாதை

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் இறுதி மரியாதை தில்லி கன்டோன்மென்ட்டில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

DIN


முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் இறுதி மரியாதை தில்லி கன்டோன்மென்ட்டில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் மற்றும் உடன் சென்ற 11 பேர் உயிரிழந்தனர். விங் கமாண்டர் வருண் சிங் காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

விபத்தில் உயிரிழந்த விபின் ராவத் மற்றும் மனைவியின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலை தில்லி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்படுகிறது. அங்கு பகல் 11 மணி முதல் 2 மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.

தில்லி கன்டோன்மென்டில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு உடல்கள் தகனம் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT