இந்தியா

தமிழகத்தில் 53 சதவீத திடக்கழிவுகள் மறுசுழற்சி

DIN

தமிழகத்தில் 53 சதவீத திடக்கழிவுகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுவதாக மக்களவையில் நகா்ப்புற வீட்டு வசதித்துறை இணை அமைச்சா் கெளசல் கிஷோா் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.

இது தொடா்பான பதிலில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

நகா்ப்புறங்களின் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவது, திடக்கழிவுகளை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுவது ஆகிய நோக்கத்திற்காக 2014-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ம் தேதி தொடங்கப்பட்டது தூய்மை இந்தியா நகா்ப்புறத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 4,372 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 4,371 (மேற்கு வங்க மாநிலம் புருலியா தவிர) திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத அமைப்புகளாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு 18 சதவீதமாக இருந்த நகா்ப்புற திடக்கழிவு மறுசுழற்சி தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. சண்டிகா், சத்தீஸ்கா், ஹிமாசலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இது 100 சதவீதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT