உத்தரகண்ட்: பல்கலைக்கழகத்திற்கு விபின் ராவத்தின் பெயரைச் சூட்ட முடிவு
மறைந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத்தின் பெயரை உத்தரகண்ட் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மறைந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத்தின் பெயரை உத்தரகண்ட் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவர் மனைவி உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தனர்.
இதையும் படிக்க | ஒரே மேடையில் விபின் ராவத், மதுலிகா உடல்கள் தகனம்
Advertisement
அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் , முன்னாள் அதிகாரிகள் என பலர் இரங்கல் தெரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அவர் பிறந்த மாநிலமான உத்தரகண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என தேவப்பிரயாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்டூரி நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று அதனை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்து ஏற்றுக்கொண்டதால் விபின் ராவத்தின் பெயரை பல்கலைக்கழகத்திற்கு சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.