இந்தியா

கோவாவில் அனைத்து வளங்களையும் பாஜக சுரண்டியுள்ளது: பிரியங்கா காந்தி

DIN

கோவாவில் உள்ள அனைத்து வளங்களையும் பாஜக தங்கள் சொந்த நலனுக்காக சுரண்டியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஒருநாள் பயமணமாக கோவா சென்றுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கோவாவில் உள்ள அனைத்து வளங்களையும் பாஜக தங்கள் சொந்த நலனுக்காக சுரண்டியுள்ளது.

நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாநிலத்தின் மக்களைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது என்றார்.

இதனிடையே தெற்கு கோவாவில் உள்ள மொர்பிர்லா கிராமத்துக்கு சென்ற பிரியங்கா காந்தி அங்கு பழங்குடி மக்களுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT