இந்தியா

‘காலநிலை மாற்றம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும்’: ஆதித்ய தாக்கரே

DIN

வருகின்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தால் பல்வேறு அழிவுகள் நிகழ்ந்து வரும் சூழலில் உலக நாடுகள் மத்தியில் அன்றாட பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்து ஆதித்ய தாக்கரே பேசியதாவது:

“வருகின்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் விவாதிக்கப்படும். காலநிலை மாற்றம் என்பது மும்பை அல்லது மகாராஷ்டிர மாநிலத்திற்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் முக்கிய பிரச்னையாக இருக்கின்றது.

காலநிலை மாற்றம் ஏற்பட்டால் உலக நாடுகளைவிட மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள இந்தியாவுக்கு தான் அதிக பிரச்னை ஏற்படும். அரசியல் நிகழ்வுகளில் காலநிலை பேசு பொருளாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பசுமை பாடத்திட்டத்தை கல்வித்துறைக்கு அளித்துள்ளோம். இது பசுமை பூமியை ஏற்படுத்த முக்கிய படியாக இருக்கும் என நம்புகிறோம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT