வாராணசி ரயில் நிலையத்துக்கு நள்ளிரவில் திடீர் வருகை தந்த பிரதமர் மோடி
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, வாராணசி ரயில் நிலையத்துக்கு திடீர் வருகை தந்தார்.
இந்தியாவாராணசி ரயில் நிலையத்துக்கு நள்ளிரவில் திடீர் வருகை தந்த பிரதமர் மோடி
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, வாராணசி ரயில் நிலையத்துக்கு திடீர் வருகை தந்தார்.
வாராணசி: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, வாராணசி ரயில் நிலையத்துக்கு திடீர் வருகை தந்தார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருப்பதாவது, அடுத்த நிலையம்.. வாராணசி ரயில் நிலையம்.. வாராணசியின் முக்கிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, ரயில் இணைப்பை மேம்படுத்தவும், தூய்மையான, நவீன மற்றும் பயணிகளுக்கு ஏற்ற ரயில் நிலையங்களை உறுதிப்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்த புனித நகரத்திற்கு சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் முயற்சி என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!
மாநில முதல்வர்களுடனான, பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்தக் கூட்டம் நிறைவு பெற்றதும், யோகி ஆதித்யநாத்துடன், நள்ளிரவில், வாராணசி ரயில் நிலையத்துக்குச் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.