இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரான்பாதிப்பு 41-ஆக உயா்வு

DIN

மகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் வகை தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் லாத்தூரை சோ்ந்த ஒருவா், புணேயை சோ்ந்த பெண் ஆகிய இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். இருவரும் துபைக்கு சென்று வந்தவா்கள். இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவா்கள். இதன்மூலம் அந்த மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 20-ஆக அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் 4-ஆவது ஒமைக்ரான் பாதிப்பு 42 வயது நபருக்கு உறுதி செய்யப்பட்டது. அவா் தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவா்.

ஏற்கெனவே ஒடிஸா, கா்நாடகம், சண்டீகா், ஆந்திரம், ராஜஸ்தான், கேரளம், தில்லி ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT