இந்தியா

தொடரும் அமளி: மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

DIN

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்வதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு புதன்கிழமை அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரியும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். இதையடுத்து பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT