புதுதில்லி: மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆண்டு இறுதி பரிசுகள் பணவீக்கம், வேலையின்மை மற்றும் வாராக்கடன் தள்ளுபடிகள் போன்றவற்றை அனுபவிப்போம் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது சுட்டுரை பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆண்டு இறுதி பரிசுகளை அனுபவிப்போம். சில்லரை பணவீக்கம் 4.91 சதவிகிதம், இதில் எரிபொருள் மற்றும் ஆற்றல் 13.4 சதவிகிதம் அதிகரிப்பு, வேலையின்மை விகிதம் 8.53 சதவிகிதமாக அதிகரிப்பு, இதில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 10.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதையுடம் படிக்க | ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
வாராக்கடன்:
கடந்த 2020-21ஆம் ஆண்டில் வங்கிகளில் வாராக்கடன் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 783 கோடியாகும். இதில் ரொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூ.4,86,800 கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 13 கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,61,820 கோடியை தள்ளுபடி செய்ததால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.2,84,980 கோடியாகும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.