இந்தியா

மக்களவை நாளை(டிச.16) காலை வரை ஒத்திவைப்பு

லக்கிம்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

DIN

லக்கிம்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதும், வன்முறையில் ஈடுபட்டதும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி எனவும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.

இந்நிலையில், இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்து லக்கிம்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், காலை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து பிற்பகல் கூட்டம் தொடங்கியபோது அவைத் தலைவரின் இருக்கையின் முன்பு நின்று அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

SCROLL FOR NEXT