இந்தியா

மாநிலங்களவை டிச.20 காலை வரை ஒத்திவைப்பு

DIN

மாநிலங்களவை திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.

குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை ராஜிநாமா செய்யக் கோரி அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவையில் வெங்கைய நாயுடு பேசியதாவது:

“இன்று அரசுத் தரப்பு அவைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். உங்கள் அனைவரிடமும் அவையை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுகின்றேன். அவைத் திங்கள்கிழமை காலை 11 மணிவரை ஒத்தி வைக்கப்படுகிறது என்றார்.”

இதற்கிடையே மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை தொடர்ந்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT