தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்படும்: அகிலேஷ் யாதவ் 
இந்தியா

தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்படும்: அகிலேஷ் யாதவ்

லக்கிம்பூர் கேரி வன்முறையை, ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

PTI


ரே பரேலி: லக்கிம்பூர் கேரி வன்முறையை, ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரிட்டீஷார் கூட முன்னாலிருந்துதான் சுட்டனர், ஆனால் பாஜக, பின்னாலிருந்து ஜீப்பை ஏற்றிக் கொன்றது என்று கூறியுள்ளார்.

சமாஜ்வாதி வெற்றி யாத்திரையின் ஒரு பகுதியாக, ரே பரேலி சென்றிருக்கும் அகிலேஷ் யாதவ், வரும் 2022ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி படுகொலை நடந்துள்ளது. ஒரு முறை வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், நமக்கு ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவுக்கு வரும், அப்போது, முன்னால் நின்றுகொண்டு, பிரிட்டீஷார் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். 

ஆனால், பாஜகவோ, விவசாயிகளின் பின்னாலிருந்து ஜீப்பை மோதவிட்டுள்ளது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT