இந்தியா

பஞ்சாப் அருகே, பாகிஸ்தான் எல்லையில் டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை

PTI


புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பஞ்சாப் மாநிலத்துக்கு அருகே அத்துமீறி பறந்து கொண்டிருந்த டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணியளவில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செக்டார் அருகே பறந்து கொண்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கருப்பு நிறத்தில் ஒரு பொருள் சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து 300 மீட்டர் தொலைவிலும், எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் வேலியிலிருந்து 150 மீட்டர் தொலைவிலும் பறந்து கொண்டிருப்பத எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன், ஹெக்ஸா காப்பரால் செய்யப்பட்ட 4 பேட்டரிகளுடன் இயங்கும் வகையில், 23 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது சுமார் 10 கிலோ எடை கொண்ட பொருளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் டிரோன் பறந்த இடத்தில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT