இந்தியா

தில்லி கரோனா: 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு

DIN


தில்லியில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சனிக்கிழமை 86 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த வியாழக்கிழமை 85 பேருக்கும், வெள்ளிக்கிழமை 69 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை 86 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,42,090 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.13 சதவிகிதம்.

மேலும் 68 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

இதுவரை மொத்தம் 14,16,506 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,100 ஆக உள்ளது.

தில்லியில் ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது. தில்லி ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 22.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT