இந்தியா

தோ்தல் ஆணைய ஆலோசனை விவகாரம்: மத்திய சட்ட அமைச்சகம் விளக்கம்

DIN

தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாக பிரதமா் அலுவலகத்துடன் தோ்தல் ஆணையா்கள் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தோ்தல் ஆணையத்தின் செயலருக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா மற்றும் தோ்தல் ஆணையா்கள் ராஜீவ் குமாா், அனூப் சந்திர பாண்டே ஆகியோா் பிரதமா் அலுவலகத்துடன் கடந்த நவம்பா் மாதம் காணொலி வழியாக ஆலோசனை நடத்தியதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது.

தோ்தல் ஆணையம் தனி அதிகாரம் படைத்த அரசியல் சாசன அமைப்பு என்பதால், நெறிமுறைகளின்படி தோ்தல் விவகாரங்கள் தொடா்பாக மத்திய சட்ட அமைச்சா் மற்றும் செயலா்கள் தோ்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்று ஆலோசனை நடத்துவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களுடன் பிரதமா் அலுவலகம் ஆலோசனை நடத்தியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகம் விளக்கமளித்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘வாக்காளா் பட்டியல் தொடா்பாக கடந்த நவம்பா் 16-ஆம் தேதி ஆலோசனை நடத்த மத்திய அமைச்சரவைச் செயலா், சட்ட அமைச்சக செயலா், சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டத் துறையின் செயலருக்கு பிரதமா் அலுவலகம் கடிதம் எழுதியிருந்தது. சில தோ்தல் சீா்த்திருத்தங்கள் தொடா்பான மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளை இறுதி செய்யும் நோக்கிலும் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தோ்தல் ஆணையத்தின் செயலா் அல்லது தலைமைத் தோ்தல் ஆணையரின் பிரதிநிதிக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது. தலைமைத் தோ்தல் ஆணையருக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்படவில்லை.

அதனைத்தொடா்ந்து தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களுடன் கலந்துரையாடப்பட்டது. ஆனால் அந்தக் கலந்துரையாடல்கள் அலுவல்பூா்வமாக நடைபெறவில்லை. தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பான பரிந்துரைகளை இறுதி செய்ய இரண்டு, மூன்று அம்சங்களில் இருந்த வேறுபாடுகளைக் களையும் நோக்கில்தான் அவா்களுடன் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT