ரோகிணி நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: டிஆர்டிஓ விஞ்ஞானி கைது 
இந்தியா

ரோகிணி நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: டிஆர்டிஓ விஞ்ஞானி கைது

அண்டைவீட்டுக்காரரைக் கொலை செய்ய ரோகிணி நீதிமன்றத்தில் குறைந்த திறன்கொண்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்த குற்றத்துக்காக, 47 வயதான டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

PTI


புது தில்லி: அண்டைவீட்டுக்காரரைக் கொலை செய்ய ரோகிணி நீதிமன்றத்தில் குறைந்த திறன்கொண்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்த குற்றத்துக்காக, 47 வயதான டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த மாதம் 9ஆம் தேதி, புது தில்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில், குறைந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.  நீதிமன்ற அறை 102ல் நடந்த இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய பாரத் பூஷண் கட்டாரியா என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. இவர் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு)மூத்த விஞ்ஞானியாவார்.

தனது அண்டை வீட்டில் வசிக்கும் வழக்குரைஞர் ஒருவரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு, சிறிய ரக வெடிகுண்டு ஒன்றை அவர் சிறிய பெட்டியில் வைத்து வெடிக்கச் செய்துள்ளார்.

ஒரே கட்டடத்தில் வசித்து வரும் வழக்குரைஞருக்கும், கட்டாரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஏராளமான வழக்குகளைக் கொடுத்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

மின் வாகனங்களில் 40% தமிழகத்தில் உற்பத்தி: முதல்வர் ஸ்டாலின்

அதிக வயதானவர்கள் பட்டியலில் இணைந்த ஜப்பானிய பெண்!

தில்லியில் சிபு சோரன் உடலுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

SCROLL FOR NEXT