இந்தியா

நாட்டில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு: பாதிப்பில் இருந்து 7,469 பேர் மீண்டனர்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,081 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,081 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,081 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 264 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,77,422. உயிரிழப்பு விகிதம் 1.37 சதவிகிதமாக உள்ளது.

நேற்று சனிக்கிழமை 7,469 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,78,940 ஆக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.38 சதவிகிதமாக உள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 83,913 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் சதவிகிதம் 0.24 சதவிதமாக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் 2020க்கு பின் மிக குறைந்த எண்ணிக்கை ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 66,41,09,365 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,11,977 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் இதுவரை 1,37,46,13,252 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை மட்டும் 76,54,466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT