குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: கிரிப்டோகரன்சி தடையை அறிவிக்காத அரசு 
இந்தியா

குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: கிரிப்டோகரன்சி தடையை அறிவிக்காத அரசு

நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக இன்று நிறைவடைந்த நிலையில்  கிரிப்டோ கரன்சி (எண்ம செலாவணி) தடை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

DIN

நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக இன்று நிறைவடைந்த நிலையில்  கிரிப்டோகரன்சி (எண்ம செலாவணி) தடை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

கடந்த நவம்பர் மாதம், நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கிரிப்டோகரன்சிகள் தீவிர அச்சுற்றுத்தலாக உள்ளது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்ததால் அரசு அதைத் தடை செய்வதாகவும் அதற்கு பதிலாக மத்திய அரசே நெறிப்படுத்தப்பட்ட கிரிப்டோவை அறிமுகப்படுத்துவதாகவும் அதற்கான மசோதா நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது.

மேலும் , நாட்டில் தனியாா் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை விதித்து, ரிசா்வ் வங்கியின் எண்ம செலாவணியை உருவாக்க எளிதான கட்டமைப்பை ஏற்படுத்துவது இந்த மசோதாவின் நோக்கம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அதற்கான எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படாமல் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஏர் டாக்ஸி, வாட்டர் மெட்ரோ, டிராம்... 25 ஆண்டுகளில் தலைகீழாக மாறப் போகும் சென்னை!

கறுப்பு அல்ல, காதல்... ரகுல் ப்ரீத் சிங்!

நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

SCROLL FOR NEXT