இந்தியா

கர்நாடகத்தில் 33 மருத்துவ மாணவர்களுக்கு கரோனா

DIN

கர்நாடகத்தில் 33 மருத்துவ மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
உடனடியாக மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோலாரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பயின்று வருபவர்கள். 
இதனிடையே கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கா்நாடகத்தில் டிச. 30 முதல் ஜன. 2-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி கேளிக்கை விடுதிகள், திறந்தவெளியில் மக்கள் ஒன்றுகூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 
பெலகாவியில் செவ்வாய்க்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT