இந்தியா

2022-இல் மாநகரங்களில் 5ஜி சேவை: தொலைத்தொடா்பு துறை

அடுத்த ஆண்டு முதல் சென்னை, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சண்டீகா், தில்லி, ஜம்நகா், ஆமதாபாத், ஹைதராபாத், லக்னெள, புணே, காந்திநகா் போன்ற மாநகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் 5ஜி அலைக்கற்றை சே

DIN

புது தில்லி: அடுத்த ஆண்டு முதல் சென்னை, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சண்டீகா், தில்லி, ஜம்நகா், ஆமதாபாத், ஹைதராபாத், லக்னெள, புணே, காந்திநகா் போன்ற மாநகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் 5ஜி அலைக்கற்றை சேவை முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் இந்த மாநகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் 5ஜி சோதனை மையங்களை அமைத்திருப்பதன் மூலம் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகமாக உள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடா்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

5ஜி அலைக்கற்றை ஏலம் மற்றும் அதற்கான அடிப்படை விலை, ஏலம் விடப்பட வேண்டிய அளவு, ஏல வழிமுறை ஆகியவற்றில் உள்ள பல்வேறு நடைமுறைகளுக்கு அனுமதி கேட்டு இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்திடம் (டிராய்) கடந்த செப்டம்பரில் பரிந்துரை சமா்ப்பிக்கப்பட்டது. அதன் அனுமதி கிடைத்ததும், தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில், ஏா்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஆகிய தொலைத்தொடா்பு நிறுவனங்கள் சென்னை, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சண்டீகா், தில்லி, ஜாம்நகா், ஆமதாபாத், ஹைதராபாத், லக்னெள, புணே, காந்திநகா் ஆகிய நகரங்களில் 5ஜி சோதனை மையங்களை அமைத்திருக்கின்றன. அதன் மூலம், இந்த மாநகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் அடுத்த ஆண்டு 5ஜி தொழில்நுட்பம் முதல்கட்டமாக அறிமுகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT