முகப்பு
இந்தியா

ஹிமாச்சலில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

Updated On : 27 டிசம்பர், 2021 at 2:06 PM
ஹிமாச்சலில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
பகிர்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ரூ.11,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புனல் மின் திட்டம் மற்றும்  30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரேணுகாஜி அணை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டயிருக்கிறார். இந்த திட்டம் ரூ.7,000 கோடியில் உருவாக்கப்படவுள்ளது.

அத்துடன் பல்வேறு நீா் மின்திட்டங்களுக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டி பொதுமக்களிடம் உரையாற்றி வருகிறார்.

Advertisement

இதுகுறித்து மோடி பேசுகையில் , ‘சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் அதே வேளையில் நம் நாடு எவ்வாறு வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது என்று உலகம் முழுவதும் இந்தியாவைப் பாராட்டுகிறது. சூரிய சக்தியில் இருந்து நீர் மின்சாரம் வரை, காற்றாலையிலிருந்து பசுமை ஹைட்ரஜன் வரை நாடு முழுமை அடைய தொடர்ந்து உழைத்து வருகிறது’ என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.