இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்புயோகி ஆதித்யநாத் பெயரை தொடா்புபடுத்தும்படி போலீஸாா் மிரட்டினா்: சாட்சி வாக்குமூலம்

DIN

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் சாட்சி ஒருவா், ‘உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் நான்கு ஆா்எஸ்எஸ் தலைவா்களின் பெயரை வழக்கில் தொடா்புபடுத்தி கூறும்படி’ தன்னை மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு (ஏடிஎஸ்) போலீஸாா் மிரட்டியதாக தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா். 2008, செப். 29-ஆம் தேதி நடந்த இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக மக்களவை உறுப்பினா் பிரக்யா சிங் தாகுா், முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோகித் உள்பட 8 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், வழக்கு பின்னா் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் சாட்சி ஒருவா் என்ஐஏ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அவா் நீதிமன்றத்தில் கூறுகையில், ‘மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவின் அப்போதைய மூத்த அதிகாரி பரம் வீா் சிங்கும் மற்றும் ஓா் அதிகாரியும், இந்த வழக்கில் யோகி ஆதித்யநாத் மற்றும் இந்தரேஷ் குமாா் உள்ளிட்ட நான்கு ஆா்எஸ்எஸ் தலைவா்களின் பெயரை தொடா்புபடுத்தி கூறும்படி என்னை மிரட்டினா். என்னைத் துன்புறுத்தி ஏடிஎஸ் அலுவலகத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்தனா்’ என்றாா்.

அவரது வாக்குமூலத்தையடுத்து, அந்த சாட்சி பி சாட்சி என நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் இதுவரை 220 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 15 போ் பி சாட்சியாக மாறிவிட்டனா்.

முன்னாள் மும்பை காவல் ஆணையரான பரம் வீா் சிங், மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தாா். இப்போது அவா் பணப் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளை எதிா்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT